Varattupallam Dam , Anthiyur

Burgur Road, Anthiyur, 638501
Varattupallam Dam , Anthiyur Varattupallam Dam , Anthiyur is one of the popular Region located in Burgur Road ,Anthiyur listed under Tours/sightseeing in Anthiyur , Reservoir in Anthiyur ,

Contact Details & Working Hours

More about Varattupallam Dam , Anthiyur

வரட்டுபள்ளம் அணை 1980ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி திறந்து வைக்கப்பட்டது (கல்வெட்டு ஆதாரத்தின்படி ).

வரட்டுபள்ளம் அணையானது மேற்கு தொடர்ச்சி மலையான பர்கூர் மலையிலிருந்து பாய்ந்து வரும் மழைநீரை தேக்கி வைத்து அந்தியுரை சுற்றி உள்ள விவசாய நிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டது .

அணையின் மொத்த நீளம் 1.7 கி.மீ , அதிகபட்சமாக 17மீ உயரத்திற்கு நீரை தேக்கி வைக்க முடியும் . இந்த அணையால் பயன்பெறும் பாசனப்பரப்பு 2924 ஏக்கர்.

இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து மலைப்பாதை தொடங்குகிறது. இந்த மலை பாதையில் தாமரைகரை , பர்கூர் , தட்டகரை , கர்கேகண்டி வழியாக எளிதாக மைசூரை .அடையலாம். ஆனால் சாலை சற்றே குறுகலானது. மலைப்பாதை முழுவதும் மரங்களால் சூழப்பட்டு எங்கு பாத்தாலும் தென்படும் பசுமை நம் கண்களுக்கு விருந்து படைக்கிறது .

அணையின் முகப்பு வரை வாகனத்தில் செல்லலாம். அணையின் மீது நடந்து தான் செல்ல வேண்டும். வரட்டுபள்ளம் அணை வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது . எனவே வன விலங்குகளான மான் , காட்டெருமை , குரங்குகள் , பறவைகள் நடமாட்டம் அதிகம் . மதியம் மற்றும் மாலை நேரங்களில் யானை கூட்டம் நீர் அருந்துவதற்காக அணைக்கு வரும் . இம்மாதிரியான நேரங்களில் கூடுதல் கவனம் தேவை .


எப்படி செல்லலாம் ?

வரட்டுபள்ளம் அணை அந்தியூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது . குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வசதி உள்ளது . இரண்டு / நான்கு சக்கர வாகனத்திலும் செல்லலாம் . தரமான தார் சாலை வசதி உள்ளது .


செல்வதற்கு ஏற்ற நேரம் :

காலையில் இருந்து மாலை வரை அணைக்கு செல்ல அனுமதி உண்டு . ஆனால் குழந்தைகளை அழைத்து செல்லும் பொது மாலை வேளைகளில் செல்வது நலம் . மாலை வேளைகளில் நீர் அருந்த வன விலங்குகள் /பறவைகள் அணைக்கு வரும் . அதிஷ்டம் இருந்தால் பார்க்கலாம் . ஆனால் மிகுந்த கவனம் தேவை .

முடிந்த அளவு கோடை காலங்களில் அணைக்கு செல்வதை தவிர்க்கலாம் . மழைக்காலங்களில் அணையின் நீர் மட்டம் அதிகமாக இருக்கும் . பசுமையாகவும் இருக்கும் .



பிற வசதிகள் ?

சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் உள்ளது. வரட்டுபள்ளம் அணை மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு கடைகள் எதுவும் கிடையாது . தின்பண்டங்கள் வாங்க விருப்பபட்டால் அந்தியூரில் இருந்தே வாங்கி வருவது நலம்.


கூடுதல் தகவல் ?

வரட்டுபள்ளம் அணைக்கு செல்பவர்கள் தங்களது சொந்த வாகனத்தில் செல்வது சிறந்தது .
ஏனெனில் அந்தியூரில் இருந்து அணைக்கு வரும் வழியில் உள்ள மற்ற இடங்களை பார்க்கலாம் .

அந்தியூரில் இருந்து வரட்டுபள்ளம் அணைக்கு வரும் வழியில் 4கி.மீ தொலைவில் மிகவும் சிறப்பு வாய்ந்த அருள்மிகு குருநாதசுவாமி கோவில் உள்ளது . இங்கு வழிபட்டபின் 1கி.மீ தாண்டியவுடன் ஐய்யப்பன் கோவில் உள்ளது . இது ஒரு சிறிய மலை. பின் அங்கிருந்து 1/2கி.மீ கடந்தால் கிருஷ்ணா புறம் பெரிய ஏரி உள்ளது . ஏரியின் அழகை ரசித்தவாறே இன்னும் 1கி.மீ தூரம் சென்றால் குருநாதா சுவாமி கோவிலின் வனக்கோவிலுக்கு செல்லும் சாலை இடது புறமாக செல்லும். வனக்கோவிலில் இருந்து மந்தை , வட்டக்காடு வழியாகவும் வரட்டுபள்ளம் அணையை சென்றடையலாம் . ஆனால் இது சுற்று வழி. எனவே அங்கே சென்றுவிட்டு அங்கிருந்து வந்த வழியாகவே திரும்பி வரட்டுபள்ளம் செல்லும் சாலையை அடைந்து சிறிது தூரம் சென்றால் மூலக்கடை என்ற இடத்தை அடையலாம் . ஏதேனும் தின்பண்டங்கள் , குடிநீர் வாங்க வேண்டி இருந்தால் இங்கே வாங்கி கொள்ளலாம் .பின் அங்கிருந்து வரட்டுபள்ளம் செல்லும் சாலையில் சென்றால் வனத்துறையின் சோதனை சாவடி வரும் . அதை தாண்டி 1.5கி.மீ தூரம் சென்றால் இடது புறமாக அணைக்கு செல்லும் சாலை தென்படும் . அதில் சென்றால் சிறிது தூரத்தில் வரட்டுபள்ளம் அணையை அடையலாம் .

Map of Varattupallam Dam , Anthiyur