Natural Beauty of Kanyakumari

Nagercoil, Kanyakumari, 629702
Natural Beauty of Kanyakumari Natural Beauty of Kanyakumari is one of the popular City located in Nagercoil ,Kanyakumari listed under City in Kanyakumari , Media/news/publishing in Kanyakumari , Tourist Attraction in Kanyakumari ,

Contact Details & Working Hours

More about Natural Beauty of Kanyakumari

இந்தியா நமது "தாய்" நாடு..! கன்னியாகுமரி நம் "தாய்" வீடு..!

Like Now ••••► Natural Beauty of Kanyakumari



இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது. காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம்.

சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது.


இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான்.

கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது.

இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது.

அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை. கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.

மாவட்டத்தின் எல்லைகள்: வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம். மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது. இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.

பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது.

1) புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி)

2) நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி)

3. வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது.

முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது. சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன். அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.
இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும்.

நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது.

திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது. 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது. 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.


Kanyakumari [ Natural Beauty of Kanyakumari ]

-----------------------------------------------------------------------

நாகர்கோவில் இலக்கியத் துறையில் சிறப்புற்று விளங்குகிறது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,சதாவதானி செய்கு தம்பி பாவலர், எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. என். சிவராஜபிள்ளை, வித்துவான் லட்சுமணபிள்ளை போன்ற தமிழறிஞர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள்.

திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர்.

நாகர்கோயிலில் நவீன எழுத்தாளர்கள் பல உருவாயினர். சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் போன்றவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள். ஜெயமோகன், ஜெ.ஆர்.வி.எட்வர்ட், லட்சுமி மணிவண்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

அ.கா.பெருமாள், குமரிமைந்தன், எம்.வேதசகாயகுமார், தெ.வே.ஜெகதீசன், மா.சுப்ரமணியம், ஜேம்ஸ் ஆர் டேனியல், இரணியல் கலைத்தோழன் போன்ற நவீன இலக்கிய ஆய்வாளர்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

-----------------------------------------------------------------------

Kanyakumari [ Natural Beauty of Kanyakumari ]


Kanyakumari District in the state of Tamil Nadu in India. It lies at the southernmost tip of mainland India (the southern extremity of India as a whole being Indira Point on Great Nicobar Island).

Cape Comorin is the southern tip of the Cardamom Hills, an extension of the Western Ghats range along the west coast of India. The nearest major city is Nagercoil, the administrative headquarters of Kanyakumari District, 22 km (14 mi) away.

Kanyakumari was one of the important towns of the ancient Tamilakam (Sangam period) and is a popular tourist destination.

Surrounded by Majestic Hills and the plains bordered by colourful sea-shores, fringed with coconut trees and paddy fields, here and there are few elevated patches of red cliffs with undulating valleys and plains between the mountainous terrain and the sea - coast, so closely interwoven with Temples and Churches and other edifices lies the district, 'Kanyakumari'. (The district name is spelled as 'Kanniyakumari' in official records which is in tune with the spoken name of the district in Tamil language). With an area of 1672 sq.km. it occupies 1.29% of the total extent of Tamil Nadu. It ranks first in literacy among other districts in Tamil Nadu.

** Natural Beauty of Kanyakumari **

____________________________________________


Map of Natural Beauty of Kanyakumari