ஆன்மீக மறுமலர்ச்சி / Organisation to save the world in all aspects

ongarakduil road, Thuraiyur, 621010
ஆன்மீக மறுமலர்ச்சி /  Organisation to save the world in all aspects ஆன்மீக மறுமலர்ச்சி / Organisation to save the world in all aspects is one of the popular Society & Culture Website located in ongarakduil road ,Thuraiyur listed under Society & Culture Website in Thuraiyur ,

Contact Details & Working Hours

More about ஆன்மீக மறுமலர்ச்சி / Organisation to save the world in all aspects

மனதில் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு சுயநலத்தோடு பண்பில்லாமல் வாழ்கின்ற மக்கள் அவர்தம் வாழ்வினிலே விரைந்து பணக்காரனாக வேண்டும் என்பதற்காக குறுக்கு வழிகளிலே சென்று வருவாய்தனை பெருக்கி லஞ்சம் மிகுந்து தாழ்வான செயல்களை புரிகின்றவர்க்கெல்லாம் தணிகாசலனாம் முருகப்பெருமான் தருகின்ற தண்டனைக் காலம் துவங்கிவிட்டதப்பா.

முருகப்பெருமானே தீவழி செல்வோரை தண்டிக்க தொடங்கிவிட்டதினாலே உலக மக்களே மிகுந்த எச்சரிக்கை வேண்டும் வாழ்வினிலே. கருணையில்லாமல், மனிதநேயம் இல்லாமல் வாழ்கின்றவர்களுக்கு அவர்களது ஆயுட்காலம் இனி முடிவிற்கு வந்துவிடுமப்பா. அவர்களெல்லாம் எமபயம் கொண்டு மரண கண்டங்களினால் அழிந்து போவார்கள். தயவு இல்லாதவர்க்கு அழிவு உண்டு, அநீதியால் நடந்து ஆகாத செயல்களை செய்து வாழ்பவர்களுக்கு அழிவுகாலம் விரைந்து வருவது உறுதியப்பா.

ஆதலினால் கலியுக மக்களே இனியேனும் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மனமாற்றம் தனைப் பெற்று மனப்பக்குவத்துடன், சாந்தமாக தயவுடன் தக்கதொரு தெய்வநெறிக்கு வந்துவிடுங்கள், தருமநெறிக்கு வந்துவிடுங்கள், ஆறுமுக அரங்கனின் தூய ஆன்மீக நெறிக்கு வந்துவிடுங்கள்.

ஆறுமுக அரங்கமகாதேசிகரின் தூய நெறிவழி உலகமக்களெல்லாம் வருகையுற்று அண்ணல் அரங்கன் மேற்கொள்கின்ற அறப்பணிகளுக்கு உதவிகள் செய்து வள்ளலாய் திகழ்ந்து தருமத்தை பெருக்கிட அளவில்லாத பெருஞ்சக்தியாக மாறி ஆறுமுக அரங்கமகாதேசிகரின் துணையுடன் கலியுகமே யுகமாற்றம் தனை அடைந்திடுமப்பா.

அரங்கன் துணையால் யுகமாற்றம் நடக்க போவது உறுதி! உறுதி!! மக்களுக்கு உறுதியளித்து உலக ஞானிகளெல்லாம் கூட்டமாய் ஒன்றுகூடி அரங்கனின் கட்டளைக்கு கீழ்படிந்துள்ளோம். ஆகையினாலே கடைத்தேற வேண்டுமாயின் வருகைதாருங்கள் ஏழாம் படை வீடு துறையூர் ஓங்காரக்குடிலிற்கு, வந்து அரங்கனை காணுங்கள் வளம் காண்பீர் தடையின்றி அவரவர் வாழ்வினிலே என தமது ஜோதி சூட்சும நூல் மூலம் கூறுகிறார் மகான் யூகிமுனிவர்.

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....

வருங்காலம் ஞானசித்தர் காலம் என்பதை முடிவுடன் அறிவித்தனர் ஞானிகள். முருகன் தலைமையிலே துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 2ம் நாள் செவ்வாய்க் கிழமை பரணி நட்சத்திரத்திலேஇவ்வுலகில் துவங்குகிறது என்பதை அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....

துர்முகி வருடம் ஐப்பசி பரணி நட்சத்திரம் கொண்ட நாளிற்குள் (18.10.2016) எவரெல்லாம் ஆறுமுக அரங்கர் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு பொருளுதவி செய்கிறார்களோ அவர்களெல்லாம் ஞானபண்டிதன் ஆட்சியில் பதவிகளை பெறுவார்கள்.

Map of ஆன்மீக மறுமலர்ச்சி / Organisation to save the world in all aspects

OTHER PLACES NEAR ஆன்மீக மறுமலர்ச்சி / ORGANISATION TO SAVE THE WORLD IN ALL ASPECTS