ஐந்துநிலைநாடு சிங்கம்புணரி தெய்வீகபுலவர் சித்தர்முத்துவடுகேசதேவர் ஜீவஆலயம்

singampunari, Singampunari, 630502
ஐந்துநிலைநாடு சிங்கம்புணரி தெய்வீகபுலவர் சித்தர்முத்துவடுகேசதேவர் ஜீவஆலயம் ஐந்துநிலைநாடு சிங்கம்புணரி தெய்வீகபுலவர் சித்தர்முத்துவடுகேசதேவர் ஜீவஆலயம் is one of the popular Religious Organization located in singampunari ,Singampunari listed under Landmark in Singampunari , Church/religious organization in Singampunari ,

Contact Details & Working Hours

More about ஐந்துநிலைநாடு சிங்கம்புணரி தெய்வீகபுலவர் சித்தர்முத்துவடுகேசதேவர் ஜீவஆலயம்

சிங்கம்பிடாரி
சரித்திரவரலாற்று சிறப்புமிக்க சேதுநாடு, முக்குலத்து மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்திலும், மராட்டியர்கள், நாயக்கர்கள் மன்னராக இருந்துஆட்சி செய்த காலத்திலும் தன்னாட்சியுரிமைகள், படைத்த அரசாட்சி வல்லமையும் வலிமையுடைய,மன்னராக இருந்தவர்கள் தான் சேது நாட்டுசேதுபதி மன்னர்கள் , அப்படி பல நூற்றாண்டு காலமாக கிழக்கே கடற்கரையும் மற்ற மூன்று திசைகளையும் சேர்...த்து 2353 சதுரமையில்கல்பரப்பளவும், 2386 ஊர்களையும் கொண்டு சிறம்பட ஆட்சி செய்து ,இறைவனுக்குபணிவும், மக்களை பாதுகாப்பு செய்வதே தன் உயிர் மூச்சாக நினைத்து 17ஆம் நூற்றாண்டு காலத்தின் இறுதி காலத்தில் ஆட்சிசெய்த மன்னர் ஸ்ரீமான்ஸ்ரீ பூவலவத்தேவர் _குமராயிநாச்சியாருக்கு இளவரசராக பிறந்தவர்ஸ்ரீசித்தர் முத்துவடுகநாததேவர் ,சிறிய வயதிலே தம் முன்னோர்களை போல் தன்னுடைய குலதெய்வ இராமநாத சுவாமியையும் ,இந்துசமய சைவ சித்தாந்த சமயநெறிப்படி அன்னை பராசக்தி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாள் அருளாசியோடும் வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில்,மன்னர் ஸ்ரீமான்ஸ்ரீ பூவலவத்தேவர் மரணம் அடைந்து விடுகிறார் அப்போது இளவரசருக்கு ஐந்து வயது சிறியவர் அவருக்கு எதிராக உடன் பங்காளிகளுக்குள் பிரச்சனைகள் ஏற்ப்பட்டு பட்டம் சூட்டுவதற்க்கு முன்னால் இளவரசரை கொல்லமுயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி அறிந்து மந்திரி, மெய்காப்பர் உதவியுடன் மேற்குதிசை நோக்கி இளவரசர் தூங்கிக்கொண்டு இருக்கும் போதே ராணி இரவதோடு இரவாக அரண்மனையை விட்டு புறப்பட்டு செல்கிறார்கள் பொழுது விடியும்காலை நேரத்தில் கண் விழித்துப்பார்க்கும் போது, சிங்கம்பிடாரி (சிங்கம்புணரி) வந்துவிட்டார்கள்.என் தாயே! அவரசப்பட்டு என்ன காரியம் செய்து செய்தீர்கள் ,அங்கு இருந்தால் நமக்கு தீங்கு செய்ய நினைத்த தேச துரோகதூரோகியான அவர்களை அங்கே என் சித்தஅருளால் எல்லா காரியத்தையும் உண்டு இல்லை என்று செய்து இருப்பனே ,பரவா இல்லைஎன்னோடு அன்னை பராசக்திஸ்ரீ வராஹிஅம்மாளும் குல தெய்வங்களும் என்னை காக்க என்னுடன் வந்து உள்ளார்கள் ,எனக்கும் ஆட்சி அதிகாரத்தில் நாட்டம் துளியளவு கூட விருப்பம் இல்லை என்று தன் தாய்க்கு ஆறுதல் சொல்லி மிகக் களைப்பாக ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருக்கும் வேலையில், அந்தவழியாக வந்த ஜெகநாதப்பிள்ளை அவர்கள்.

தனது பண்ணை அமைந்து உள்ள அழகர்கோவில் பால மேட்டுக்கு அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தி ஆதரவுக் உதவிகரம் கொடுக்கிறார்,காலங்கள்கடந்து செல்கின்றன, பின்புசித்தர் ஸ்ரீ முத்துவடுகநாததேவர் ஸ்ரீலஸ்ரீபாலைய சுவாமி அவர்களிடம் உபதேசங்கள் அனைத்தையும் பெற்றுசித்த ஆன்மீக சிறப்புடமை பெறுகிறார்,அடுத்தபணியாக மேலூர் ஆலம்பட்டிக்கு அருகில் உள்ள பட்டூரில்அனைவருக்கும் கல்வி கற்றுகொடுக்கும் ஆசிரியர் பணியைசெய்கிறார்,வாத்தியார் என்ற பணியையும் அதோடு ஆன்மீக சித்தந்திலும் சிறந்து புகழ்பெற்று விளங்குகிறார், இந்த சூழ்நிலையில் 105ஊர்களை கொண்ட ஐந்துநிலை நாடடில் உள்ள குல தெய்வங்களுக்கு கட்டுப்படாமல் பீதாம்பரர்மாய வித்தைகள் பல நடைபெற்று மக்கள் பயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், தேவர்குலத்து அம்பலத்து கூட்டத்தார்கள், கிராமாத்தார்கள் அனைவரும் ஒன்று கூடி ,பட்டூரில் உள்ள சித்தர் அவர்களை அழைத்து வந்து, தங்கள் நாட்டில் ஆன்மீகசித்தாந்த காந்த சக்தியையும், ஸ்ரீ தான்தோன்றிய ஸ்ரீசேவுக மூர்த்தி அருளை இந்தமண்ணில்மீண்டும்பெறவைக்கவேண்டும்,நாட்டையும்செழுமையாகஉருவாக்கவும்,கரந்தமலையில்இருந்து பாய்ந்துவரும் ஆறும், உப்பாறும் ஒன்றாக சேர்ந்து செல்வம் செழித்து ஐந்துநிலை தேவர்நாடு ஓற்றுமையோடு வாழவேண்டுமெனசித்தரை அழைத்து வருகிறார்கள் சிங்கம்புணரில்தவக்கோலத்தில்ஆன்மீக பணியை செய்கிறார் வடதிசையில் உள்ள புறம்புமலை நோக்கி தவக்கோலம் பூண்டு ,இஸ்லாமிய சித்தர் சேக்அப்துல்லா மீது ஆன்மீகபாசம் கொண்டு சித்தர் ஸ்ரீ முத்துவடுகநாத தேவர்தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மீக தவம்செய்கிறார்.50 வயதில் இருந்து 80வயதில் இறுதிவரை ஆன்மீக சித்தாந்த பணிகள் செய்து தவக்கோலத்தோடு ஜீவசமாதி அமைய பெற்று உள்ளார்.

சித்தரின் அருள்பெற இன்று வரை சேது நாட்டு மன்னர் வம்சாவளிகளும் சிவகங்கை மன்னர் வம்சாவளிகளும் வணங்கி செல்கிறார்கள். ,சித்தரோடு வந்த வம்சாவளிகள் சிங்கம்புணரியில் வசித்து குல தெய்வ அம்மனுக்கும் ,சித்தருக்கும் பூஜைகள் செய்து வருகிறார்கள். சித்தர்வாழ்ந்த வீட்டில்உள்ளஅவர் பயன்படுத்திய தவப் பொருள்களையும் ஆன்மீகவழிபாட்டுஓலைச்சுவடிகளையும் மருத்துவ ஓலைசுவடிகளையும்,மரக்காலணியும்இன்றுவரை ஆன்மீக சித்தரை நினைத்து பாராமரித்து அன்மீக சித்தரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .ஒவ்வொரு வருடமும் “வாத்தியார் திருவிழா” சிறப்பாகவும் ,ஆடிமாதம் ரோகிணி நட்சத்திரம் அன்று ஸ்ரீவாரகி அம்மனுக்கும் ஸ்ரீ சித்தர் முத்துவடுகநாத தேவருக்கும் செய்யும் பூஜைகளையும் திருவிழாவையும் கண்டால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் முக்குலத்தில் சேது நாட்டு மன்னர் ஸ்ரீ சித்தர்முத்து வடுகநாத தேவரை வாழ்ந்து ஜீவசமாதி ஆனா சிங்கம்புணரிக்கு சென்று எல்லோரும் சித்தரின் அருளாசி பெறுங்கள் ....

Map of ஐந்துநிலைநாடு சிங்கம்புணரி தெய்வீகபுலவர் சித்தர்முத்துவடுகேசதேவர் ஜீவஆலயம்

OTHER PLACES NEAR ஐந்துநிலைநாடு சிங்கம்புணரி தெய்வீகபுலவர் சித்தர்முத்துவடுகேசதேவர் ஜீவஆலயம்