Sri Sedeviamman Temple Kanjikovil

Main Road,Kanjikovil, Erode, 638116
Sri Sedeviamman Temple Kanjikovil Sri Sedeviamman Temple Kanjikovil is one of the popular Religious Organization located in Main Road,Kanjikovil ,Erode listed under Hindu Temple in Erode , Religious Organization in Erode , Community organization in Erode ,

Contact Details & Working Hours

More about Sri Sedeviamman Temple Kanjikovil

காஞ்சிக்கோயில் சீதேவி அம்மனின் தங்கை பாரியூர் கொண்டத்து காளியம்மன். விவசாயி ஒருவன் கொண்டத்துக் காளியம்மனை தன் மந்திரச் சொல்லால் கட்டி அடிமைப்படுத்தினான். மந்திரத்துக்கு காளி கட்டுப்படும் வழக்கமுடையவள். ஒருமுறை காஞ்சிக்கோயில் திருவிழாவிற்கு சீதேவியம்மன், காளியம்மனை அழைக்க சென்றாள். அடிமைப்பட்டிருந்த தங்கையின் நிலை கண்டு கொதித்த அவள், விவசாயியை அழித்தாள். சர்வசக்தியும் வாய்ந்த அவளுக்கு கோயில் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.

குப்பண்ணசாமி, வீரமாத்தி சின்னம்மன், பெரிய காண்டிஅம்மன், கரிச்சி அப்பிச்சி சுவாமிகள், வேடன் சின்னாரி, புலிக்குத்தி வீரன், கருப்பண்ணசாமி, கன்னிமார், மாகாளியம்மன், காமாட்சியம்மன் போன்ற பிரகார தெய்வங்களை வணங்கியபிறகு, மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். செம்பொன், முளசி கண்ணன், கண்ணன் ஆகிய மூன்று குதிரைகள் கோயில் வாசலில் எழுந்தருளியுள்ளன. ராஜகோபுரத்தை கடந்து சென்றதும் லட்சுமி, பார்வதி, சரஸ்வதி சிற்பங்கள் உள்ளன. வடக்கு திசை நோக்கிய கருவறையில், கோபுரத்தின் கீழ் எட்டுக்கைகளுடன் சீதேவியம்மன் வடக்குநோக்கி எழுந்தருளியுள்ளாள். அம்மனுக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.

பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ, பிறவகைகளிலோ பிரச்சனை இருந்தால் இங்குள்ள சீதேவி அம்மனிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது

பூக்குழி: ஆனி மாதம் பூக்குழி திருவிழா நடக்கிறது. பக்தர்கள் பூஜாரியோடு 60 அடிநீளம் கொண்ட குண்டத்தில் வெள்ளை ஆடை உடுத்தி அக்னிக்குண்டம் இறங்குகின்றனர். இந்த பக்தர்களை வீரமக்கள் என்பர். கால்நடைகளுக்கும் நோய் நொடி வராமல் இருப்பதற்காக வெள்ளை குதிரை ஒன்றும் அக்னி குண்டத்தில் இறங்குகிறது. இதனைத்தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு அம்மன் எழுந்தருள்கிறாள். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது.

திருவிழா:

தேங்காய் தட்டும் விழா: ஆனி மாதம் தேர்திருவிழா நடக்கிறது. தேர் திருவிழாவின் போது முதல் மூன்று மாதத்திற்கு முன்னால் தேங்காய் தட்டுதல் விழா நடக்கிறது. இதனை தேர் முகூர்த்தம் என்பர். சித்திரை மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புண்யாச வாசனை செய்து விழா நடத்துவர்.


ஆனி மாதம் 15 நாள் திருவிழா, ஆனி மாதம் அமாவாசையில் பூச்சாட்டுதல் விழா, அக்கினி குண்டம் இறங்குதல், கார்த்திகை தீபம், வருடப்பிறப்பு.

திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Map of Sri Sedeviamman Temple Kanjikovil