Salem - City of Mountains

STEEL CITY, Selam,
Salem - City of Mountains Salem - City of Mountains is one of the popular City located in STEEL CITY ,Selam listed under City in Selam , Public places in Selam , Tourist Attraction in Selam , Shopping District in Selam ,

Contact Details & Working Hours

More about Salem - City of Mountains





தமிழக மாவட்டங்கள் உலக வரலாற்றில் தனி இடம் பெற்றவை.வேளாண் உற்பத்தி,கலை இலக்கிய படைப்புகள்,ஆடை அலங்கார ஆக்கங்கள் உள்ளிட்ட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மற்ற நாடுகளுக்கு சவால்விடும் சிறப்புகள் கொண்டவை.
இவற்றில் முதன்மையான மாவட்டமாகிய
சேலம்

தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும்.

சேலம் வரலாறு:-

சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தின்போது, சேலம் வளர்ச்சியடைந்த கிராமமாக இருந்தது. 1801ல் சேலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம். சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க , ஆங்கிலேயர்களால் 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் சுகாதார பணிகள் மட்டும் கவனிக்கப்பட்டன.

அதன்பின் 1886 நவ., முதல் தேதியன்று நகராட்சியாக, சேலம் அறிவிக்கப்பட்டது. சேலம் நகராட்சியின் முதல் கூட்டம், ஆங்கிலேயே கலெக்டர் அர்பத்நட் தலைமையில் நடந்தது. அவர் உட்பட 12 பேர் கலந்து கொண்ட நகராட்சி கூட்டம், 'கமிஷனர்கள் கூட்டம்' எனப்பட்டது. நகராட்சியின் முதல் தலைவராக, கலெக்டர் அர்பத்நட் இருந்தார். அப்போது சேலம் நகராட்சி ஒன்பது வார்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. சுதந்திர போராட்ட தலைவர்களில் முக்கியமானவரான ராஜாஜி, 1917- 1919ல் சேலம் நகராட்சி தலைவராக இருந்தார்.


சேலம்

மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம்

நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும். பாக்சைடு கனிமம், லாரிகட்டுமானம், இரும்புத் தொழிற்சாலை என பல சிறப்புகளைக் கொண்ட நகரம். மலை சூழ்ந்த நாடு என்பதைக் குறிக்கும் சேலா, ஷல்யா

என்ற சொற்களில் இருந்து தான், சேலம் என்ற பெயர் உருவானது. வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில்

நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் 'சாலிய

சேரமண்டலம்' எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின்

கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக

கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது
நகரின் மைய பகுதியாக உள்ளது.

சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.

"மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம்..." என வர்ணிக்கக்கூடிய அளவுக்கு மாம்பழத்துக்கு பெயர் பெற்றது சேலம். சேலத்து மாம்பழம் என்று சொல்லும் போதே நாவில் நீர்சுரக்கும். காரணம் சேலம் மாம்பழத்துக்கு அத்தனை ருசி.

சேலம் மிகப்பழமையான நகரம். மலைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, கஞ்சமலை, ஜருகுமலை, பச்சை மலை, அருநூத்து மலை, போதமலை என மலைகள் சூழ்ந்திருப்பதால் முதலில் சைலம் என்றழைக்கப்பட்டதாகவும் பின்னர் சைலம் மருவி சேலம் என அழைக்கப்பட்டதாகவும் சொல்வது உண்டு. மேலும் சேரநாட்டின் கிழக்கு எல்லையில் இருந்ததால் சேரலம் என்றும், சமண சமயத்தின் முக்கிய தளமாக விளங்கியதால் சைலம் என்றும் அழைக்கப்பட்டு பிறகு சேலம் என மாறியதாகவும் கூறப்படுகிறது. சேலம் பகுதியில் பார்த்து ரசிக்க இடங்கள் பல உண்டு. கூடவே அருகில் உள்ள மலைப்பிரதேசமான ஏற்காடும் சேலத்துக்கு சிறப்பு சேர்த்துக் கொண்டிருக்கிறது. சேலம் என்றதும் அருகில் உள்ள குளுகுளு மலைப்பகுதியான ஏற்காடு நினைவுக்கு வராமல் இருக்குமா?. சேலத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சிறிய மலைவாசஸ்தலம் ஏற்காடு. பச்சைப் பட்டு போர்த்தியதைப் போல பரந்து விரிந்திருக்கும் வனப்பகுதிகளும் காபித் தோட்டங்களும் கண்களை கொள்ளை கொள்ளும். காற்றில் மிதந்து வரும் ஏலக்காய் வாசனை நாசியைத் துளைக்கும். ஏற்காட்டில் உள்ள ஏரியில் படகுச்சவாரி உண்டு. விதவிதமான படகுகளில் சவாரி செய்து மகிழலாம். ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை பண்ணை, கிள்ளியூர் அருவி, பிரமிட் முனை (பகோடா முனை) போன்ற இடங்களுக்கு ஒரு ரவுண்டு சென்று வந்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

Map of Salem - City of Mountains