Gowra Puthaga Maiyam

9, Saint John Church Complex, Rockins Road, Tiruchirappalli, 620001
Gowra Puthaga Maiyam Gowra Puthaga Maiyam is one of the popular Bookstore located in 9, Saint John Church Complex, Rockins Road ,Tiruchirappalli listed under Book Store in Tiruchirappalli , Publisher in Tiruchirappalli , Copying & Printing in Tiruchirappalli ,

Contact Details & Working Hours

More about Gowra Puthaga Maiyam

இல்லந்தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம் என்கிற முழக்கத்துடன் தரமான நூல்கள் மக்கள் வாங்கும் விலையில் பதிப்பித்து வரும் சாரதா பதிப்பகம், சீதை பதிப்பகம், நாம் தமிழர் பதிப்பகம், ராமையா பதிப்பகம் உள்ளடக்கிய பதிப்புக் குழுமுத்தின் பதிப்பாசிரியர் திருமதி கௌமாரீஸ்வரி எம்.ஏ., எம்.எல்.ஐ .எஸ்.,

தேனி மாவட்டம் சின்னம சேர்ந்த அவர், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் சிறந்த மாணவி விருது பெற்றவர். பதிப்புத்துறையில் கடும் போட்டிக்கிடையே வெற்றிகரமான பதிப்பாளராகத் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.

புத்தாயிர தினமான 1-1-2000 அன்று அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மூலமாக இவர் பதிப்புத்துறையில் தடம் பதித்தார். முதலாண்டிலேயே 20 ஆயிரம் படிகளுக்கு மேல் இந்நூல் விற்பனையாகி பதிப்புத்துறையினரை வியந்து பார்க்க வைத்தது. அதைத் தொடர்ந்து திருக்குறள் 17 உரைகள், அமரர் கல்கியின் 27 நூல்கள், பாவேந்தரின் 25 நூல்கள், கலைஞரின் கவிதை, புலவர் குழந்தையின் 22 நூல்கள், மயிலை சீனி வேங்கடசாமி 17 நூல்கள், நா.மு.வேங்கடசாமியின் 17 நூல்கள், நா.மு.வேங்கடசாமி நாட்டாரின் 16 நூல்கள், புதுமைப்பித்தன் 7 நூல்கள், தீபம் நா. பார்த்தசாரதியின் 11 நூல்கள் (18), சிறுவர் இலக்கியம் சார்ந்த 100 நூல்கள், கல்வியில் சார்ந்த 50க்கும் மேற்பட்ட நூல்கள், தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், இலக்கன-இலக்கிய நூல்கள் உள்பட ஏறத்தாழ 500 தலைப்புகளுக்கு மேற்பட்ட நூல்களை கடந்த 8 ஆண்டுகளில் பதிப்புத்துள்ளார்.
இவர் பதிப்பித்த பல நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாகவும் துணை நூல்களாகவும், மேற்கோள் நூல்களாகவும் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், வாசகர்கள் வாங்கும் திறனுக்கேற்ப நூலுக்கு விலை வைப்பது இவரது தனிச்சிறப்பு. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறார் என்பது பழமொழி. இவரது வெற்றியின் பின்னணி நேர்மானது. பதிப்பாசிரியர் கௌமாரீஸ்வரியின் வெற்றக்கு பின்னல் துணை நிற்கிறார் இவரது தலைவர். தமிழர்களின் இல்லங்களில் கட்டாயம் ஒரு நூலகம் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் தரமான நூல்களை நியாயமான விலையில் வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இவரது இலக்கு.

Map of Gowra Puthaga Maiyam