Devasthanam Pettavaithalai

Ganeshapuram Road, Tiruchirappalli, 639112
Devasthanam Pettavaithalai Devasthanam Pettavaithalai is one of the popular Hindu Temple located in Ganeshapuram Road ,Tiruchirappalli listed under Local service in Tiruchirappalli ,

Contact Details & Working Hours

More about Devasthanam Pettavaithalai

பெட்டவாய்த்தலை(பழைய பெயர் திருப்போர்ப்புறம்), திருச்சி மாவட்டம்


வரலாறு:

இக்காலத்தில் திருச்சிக்கும் கரூருக்கும் இடையில் பெட்டவாய்த்தலை என்னும் பெயருடன் விளங்கும் ஊர் சங்ககாலத்தில் போர்வை என வழங்கப்பட்டது.

போர் என்னும் ஊரைப் போர்வை என்றும், போஒர் என்றும் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது.

சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர மன்னன் சோழன் செங்கணானொடு திருப்போர்ப்புறம்(பெட்டவாய்த்தலை) என்னும் ஊரில் போரிட்டபோது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்கோட்டத்துச்(குடவாசல்) சிறையில் கிடந்து, தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 8766 ஆகும். இவர்களில் பெண்கள் 4402 பேரும் ஆண்கள் 4364 பேரும் உள்ளனர்.


திருச்சி மாவட்டம் திருச்சி- கருர் தேசிய நெடுஞ்சாலையில்,காவிரி கரையில் 75% விவசாய நிலத்தையும் ,3% நீர் 22% குடியிருப்பு பகுதியை கொன்ட டெல்டா பகுதி தான் பெட்டவாய்த்தலை..

முதலமைச்சாரல் சுத்தமான ஊர் என்று 2016ம் ஆண்டு விருது வழங்க்கப்பட்டது.

Map of Devasthanam Pettavaithalai