புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை

Idindakarai, 627104
புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை is one of the popular Religious Center located in ,Idindakarai listed under Church/religious organization in Idindakarai , Religious Organization in Idindakarai ,

Contact Details & Working Hours

More about புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை

இடிந்தகரையின் முதல் ஆலயம் புனிதர்கள் இராயப்பர் மற்றும் சின்னப்பர் பெயரில் 1552ல் கட்டப்பட்டது.இவ்வாலயம் ஊரின் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக இருந்தது.இவ்வாலயம் சிறியதாகவும்,பழமையாகவும் இருந்ததாலும்,கடல் ஆலய வளாகத்தை நெருங்கியதாலும், சற்று வடமேற்காக பெரிய ஆலயம் ஒன்றைக்கட்ட மக்கள் தீர்மானித்தார்கள்.கைவிடப்பட்ட பழைய ஆலயத்தில் புனித வியாகுல அன்னை கன்னியர் மடம் இயங்க ஆரம்பித்தது.பிறகு மடத்தைப் புதுப்பித்த போது, பழமையின் அருமை அறியாமல் கோவிலின் அமைப்பு மாற்றப்பட்டு விட்டது.
smile emoticon 1833ல் புதிய கோவிலுக்காக ஊர்ச் செலவில் அந்திரைபட்டங்கட்டியார் மகன் தொம்மை சுவானி பட்டங்கட்டியாரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. கோவில் கட்டுவதற்கான செலவில் பெரும் பகுதி ஊர் மக்களால் கொடுக்கப்பட்டது.ஒரு சிறு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தது.
smile emoticon இடிந்தகரை பங்கு முதலில் போர்ச்சுக்கல் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது.புதிய கோவில் கட்டும் சமயத்தில் பிரான்ஸ் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது.அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் லூர்து மலையில் லூர்து அன்னை காட்சி அருளியதன் காரணமாக உலகெங்கும் லூர்து அன்னை பக்தி பரவியது.இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.அன்னையின் திரு உருவம் பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்டது.
முற்றுப் பெறாத நிலையில் 1906ம் ஆண்டு பெப்ரவரி 2ம் தேதி ஆலயம் திருநிலைப் படுத்தப்பட்டது.அதுவரை ஆலயக் கட்டுமானச் செலவு ரூ.20,000/-.
smile emoticon 1928ம்ஆண்டு கோவில் முகப்பில் 91 அடி உயரமுள்ள இரு ஊசிக் கோபுரங்களும், ஒலி எழுப்ப பெரிய மணியும் அமைக்கப்பட்டன.திருமுழுக்கு வழங்கப்பட்ட கோவில் மணியின் பெயர் சுந்தரி.1932ம் ஆண்டு மலையுடன் கூடிய கெபி கோவிலின் வடப்புறம் அமைக்கப்பட்டது.இவ்வளவு பெரிய கெபியும், நேர்த்தியாக அமையப்பெற்ற தேரோடும் வீதியும் வேறெந்த நெய்தல் கிராமத்திலும் இல்லை. ஆலயத்தை சுற்றி இயேசுவின் பாடுகளை அற்புதமாக காட்சிப்படுத்தும் 14 நிலைகள் அழகாக அமைக்கப் பட்டிருந்தன.இந்த அழகிய 14 நிலைகளும் அழகிய ஆலய பீடமும் பங்குத் தந்தை ஒருவரால் தேவையின்றி இடிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டு விட்டன.
smile emoticon 1954-55ல் கோவில் முன் மேடை அமைக்கப்பட்டது.1955-57ல் தேரும் அதற்கான பிறையும் அமைக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் முதலில் சுவரில் குடைந்து அமைக்கப்பட்டிருந்த லூர்து அன்னை,புனித இராயப்பர் மற்றும் புனித சின்னப்பர் திரு உருவங்கள் அழகிய தேக்கு மரப்பீடம் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டன.
smile emoticon 1962ம் ஆண்டு லூர்து மலையில் அன்னையின் பாதம்பட்ட கல் ஒன்று இவ்வாலயக் கெபியில் உள்ள மலையில் அமலோற்பவ அன்னை சிலையின் நேர் கீழாக பதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தில் திருமுழுக்குப் பெற்ற இருவர் ஆயர்களாகவும், 50க்கும் அதிகமானோர் துறவிகளாகவும், 100க்கும் அதிகமானோர் கன்னியர்களாகவும்ஆகியிருப்பது உலகில் வேறு எந்த ஆலயத்திற்கும் கிடைக்காத பெருமையாகும்.

Map of புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை

OTHER PLACES NEAR புனித லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை